கைவசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கு… மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்

கைவசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கு… மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் வசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு கோரிக்கையை ஏற்காதவரை அவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்று தெரிகிறது

மத்திய அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை போலீசார் டெல்லியில் எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும் விவசாயிகள் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைவசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கு… மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்
ஜே.பி. நட்டா

இதற்கிடையே டிசம்பர் 3ம் தேதிக்கு பேச்சு வார்த்தைக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலையில் கடும் குளிரில் விவசாயிகள் போராடுவதை கைவிட்டு டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ள புராரி மைதானத்தில் போராட்டத்தை தொடரும்படியும், டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் அதற்கும் மத்திய அரசு தயார் என்று தெரிவித்தார். ஆனால் விவசாயிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கைவசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கு… மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்
ராஜ்நாத் சிங்

பாரதிய கிஷான் யூனியனின் பஞ்சாப் மாநில தலைவர் சுர்ஜித் சிங் பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசிடமிருந்து ஒரு வாய்ப்பு வந்தது. விவசாயிகள் சாலையிலிருந்து அமர்ந்து போராடுவதற்கு பதிலாக புராரிக்கு மாற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் நாங்கள் அதனை பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கவில்லை.

கைவசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கு… மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்
நரேந்திர சிங் தோமர்

புராரி திறந்தவெளி சிறை என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளதால் அங்கு ஒரு போதும் செல்லக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். வேளாண் சட்டங்களில் எங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என்பதை எங்களுக்கு முக்கிய கோரிக்கை. மேலும் சட்டங்களில் அரசு கொள்முதலுக்கு உத்ரவாதம் வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அரசு எங்களுக்கு நிபந்தனை கடிதத்தை வழங்குகிறது. அரசுக்கு பெரிய மனது தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கைவசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கு… மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்
விவசாயிகள் போராட்டம் (கோப்புபடம்)

விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் கை வசம் நான்கு மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளது என்று கூறினார். அதாவது எத்தனை மாதங்கள் ஆனாலும் மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காதவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்பதை அவர் கூறுகிறார். விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால், நேற்று நள்ளிரவில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.