கொரோனாவில் இருந்து மீண்டாரா அமித் ஷா?..ட்விட்டர் பதிவை நீக்கிய பாஜக எம்.பி!

 

கொரோனாவில் இருந்து மீண்டாரா அமித் ஷா?..ட்விட்டர் பதிவை நீக்கிய பாஜக எம்.பி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆரம்ப கட்டத்தில் குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு நாட்கள் செல்ல செல்ல பன்மடங்கு அதிகரித்தது. சீனா அளவுக்கு கொரோனா நம் நாட்டில் பரவாது என கருதப்பட்ட நிலையில், ஒரு சில மாதங்களிலேயே கொரோனா பாதிப்பு சீன பாதிப்பின் அளவை எட்டியது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க பாடத சூழலிலும், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மக்களை ஆறுதல் அடைய செய்கிறது. இதனிடையே சாதாரண மக்கள் முதல்வர் அரசியல் தலைவர்கள் வரை பலருக்கும் கொரோனா பரவியது.

கொரோனாவில் இருந்து மீண்டாரா அமித் ஷா?..ட்விட்டர் பதிவை நீக்கிய பாஜக எம்.பி!

அந்த வகையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா உறுதியானது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிருந்தார். தற்போது அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்தையடுத்து பாஜக எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த பதிவை நீக்கியுள்ளார்.