‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ : அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

 

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ :  அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார்.

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ :  அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீடு ,பிரச்சாரம் என அனல்பறக்கும் அரசியல் களத்தில் பணியாற்றி வருகின்றன. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக எப்படியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக போராடி வருகிறது.இதற்காகவே பாஜகவின் முக்கிய தலைவர்களான மோடி ,அமித்ஷா ,ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் தமிழகத்திற்கு வாரம் ஒருமுறை வந்த வண்ணம் உள்ளனர்.

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ :  அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளை ஓரம் கட்ட நினைத்து காலடி எடுத்து வைத்துள்ளது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சி அதிமுக. இரட்டை தலைமையில் அதிருப்தி, சசிகலா வருகை, தினகரனின் நெருக்கடி என பல குழப்பங்களை தன்வசமாக்கிய பாஜக, அதை புத்திசாலிதனமாக பயன்படுத்திக்கொண்டு அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்குள் நுழைந்துள்ளது.

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ :  அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தில் தனித்து நின்றோ அல்லது பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தோ தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு உள்ளது.அதனால் இந்த தேர்தல் பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக இன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வருகிறார் அமித் ஷா. சுசீந்திரம் கோயிலுக்கு செல்லும் அமித் ஷா வெற்றி கொடி ஏந்தி செல்வோம் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல், குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் பிற்பகலில் ஆலோசிக்கவுள்ளார்.குமரி தொகுதியை திமுக கூட்டணி காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது கூடுதல் தகவல்.