ஒதுங்கிய கெஜ்ரிவால்…. களத்தில் இறங்கிய அமித் ஷா…. இன்று காலை அனைத்து கட்சிகள் கூட்டம்..

ஒதுங்கிய கெஜ்ரிவால்…. களத்தில் இறங்கிய அமித் ஷா…. இன்று காலை அனைத்து கட்சிகள் கூட்டம்..

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லியில் கொரோனா நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கொரோன வைரஸை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அங்கு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.

ஒதுங்கிய கெஜ்ரிவால்…. களத்தில் இறங்கிய அமித் ஷா…. இன்று காலை அனைத்து கட்சிகள் கூட்டம்..

டெல்லியில் நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று டெல்லி லெப்டினன்ட் கவர்னர் பைஜல் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் நேற்று சந்திப்பை நடத்தி கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக விவாதித்தார். பின்னர் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அறிவித்தார்.

ஒதுங்கிய கெஜ்ரிவால்…. களத்தில் இறங்கிய அமித் ஷா…. இன்று காலை அனைத்து கட்சிகள் கூட்டம்..

அதனை தொடர்ந்து டெல்லியின் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக டெல்லி யூனியன் பிரதேசத்தின் அனைத்து கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அனைத்து கட்சிகளின் கூட்டம் இன்று காலையில் நடைபெற உள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் சவுத்ரி இது குறித்து கூறுகையில், டெல்லி மற்றும் நாடு முழுவதுமாக கோவிட்-19 நிலவரம் குறித்து ஆலோசிக்க நாளை (இன்று) அனைத்து கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து எனக்கு தகவல் வந்தது என தெரிவித்தார்.