மேற்கு வங்கத்தில் ரிக்‌ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித் ஷா

 

மேற்கு வங்கத்தில் ரிக்‌ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித் ஷா

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மதியம் ரிக்‌ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்தள்ளது. இதுவரை மொத்தம் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் 10ம் தேதி 4வது கட்டமாக 44 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் ரிக்‌ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித் ஷா
பா.ஜ.க. ஊர்வலத்தில் அமித் ஷா

தற்போது இந்த 44 சட்டப்பேரவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டோம்ஜூர் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு காலையில் பா.ஜ.க. நடத்திய சாலை ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த ரிக்‌ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் ரிக்‌ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித் ஷா
ரிக்‌ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித் ஷா

ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளியான பா.ஜ.க. தொண்டரின் சிறிய வீட்டில் தரையில் அமர்ந்து அமித் ஷா சாப்பிட்டார். அந்த வீட்டு பெண்கள் சமைத்த சாதம், பருப்பு, காய்கறிகள் மற்றும் சாலடுடன் பரிமாறிய உணவை அமித் ஷாவும், அந்த தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ராஜீப் பானர்ஜியும் சாப்பிட்டனர்.