‘டெல்லியில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்’ – அமித்ஷா மீண்டும் ஆலோசனை!

‘டெல்லியில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்’ – அமித்ஷா மீண்டும் ஆலோசனை!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நூற்றுக் கணக்கான பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த வியாழக்கிழமையில் இருந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தகர்க்க முயன்றனர்.

‘டெல்லியில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்’ – அமித்ஷா மீண்டும் ஆலோசனை!

இதனால் டெல்லியில் பதற்றம் நீடித்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர். டிச.3ம் தேதி விவசாய அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில், நேற்றே திடீர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டாததால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘டெல்லியில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்’ – அமித்ஷா மீண்டும் ஆலோசனை!

இந்த நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமித்ஷா மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக அறிவிக்கப்பட்டதன் படி நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.