டெல்லியில் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்- அமித்ஷா அவசர ஆலோசனை!

 

டெல்லியில் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்- அமித்ஷா அவசர ஆலோசனை!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கூடி கடந்த வியாழக்கிழமை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அம்பாலா அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்கள் மீது புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் பேரணியை கலைக்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசார் மீது கற்களை வீசி எறிந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

டெல்லியில் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்- அமித்ஷா அவசர ஆலோசனை!

பல தடைகளை தகர்த்து முன்னேறிச் சென்ற விவசாயிகள், டெல்லியில் தொடர்ந்து அறவழி போராட்டம் நடத்தி வந்தனர். கடும் குளிரை பொருட்படுத்தாமல் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, 6 நாட்களாக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், டிச.3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்- அமித்ஷா அவசர ஆலோசனை!

இருப்பினும் டெல்லியில் நடக்கும் போராட்டத்தால் பதற்றம் நீடிக்கும் சூழலில், விவசாய அமைப்புகளுடன் இன்றே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசின் முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து, இன்று காலை விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு டெல்லியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை தகர்க்க முயன்றதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டெல்லியில் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்- அமித்ஷா அவசர ஆலோசனை!

இந்த நிலையில், போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா வீட்டில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.