மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறியது. டிராக்டர் பேரணியை போலீசார் தடுக்க முயன்றதால், தள்ளு முள்ளு ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரை எதிர்த்து விவசாயிகள் முன்னேறிச் செல்ல முயன்றதால் டெல்லி கலவர பூமியாக மாறிவிட்டது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்போது, செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். அங்கிருக்கும் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக் குறியாகியிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!

விவசாயிகளை செங்கோட்டையில் இருந்து வெளியேற்ற முடிவெடுத்த மத்திய அரசு, டெல்லியில் இன்டர்நெட் வசதியை துண்டித்ததோடு 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் டெல்லியில் 144 தடை அமல் படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகளின் பேரணியில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், டெல்லி கலவரம் தொடர்பாக காவல் துறையிடம் அறிக்கை கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.