அமித் ஷா மருத்துவமனையில் இருந்தாலும் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு இன்னும் ஆபத்துதான்.. சிவ சேனா

 

அமித் ஷா மருத்துவமனையில் இருந்தாலும் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு இன்னும் ஆபத்துதான்.. சிவ சேனா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழ்நிலையில், அமித் ஷா மருத்துவமனையில் இருந்தாலும் கெலாட் அரசுக்கு இன்னும் ஆபத்துதான் என சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா கூறப்பட்டுள்ளது. சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அமைச்சர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தியால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அதிகம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஷா எங்கியிருந்தாலும் அவரால் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், ஆகையால் கெலாட் அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது.

அமித் ஷா மருத்துவமனையில் இருந்தாலும் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு இன்னும் ஆபத்துதான்.. சிவ சேனா
மத்திய உள்துறை அமைச்சரும் தனிமைப்படுத்தலுக்கு சென்றார், கெலாட்டும் தனது எம்.எல்.ஏ.க்களை தனிமைப்படுத்தியுள்ளார் அதாவது இன்னும் ஆபத்து நீடிக்கிறது. சமூக விலகலை அரசாங்கம் பின்பற்றியது உண்மைதான் ஆனால் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன்னிடம் தொடர்பு கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படியும், அவர்களாகவே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். உள்துறை அமைச்சர் சொன்னால் மத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தனிமைப்படுத்துலுக்கு சென்று இருக்க வேண்டும்.

அமித் ஷா மருத்துவமனையில் இருந்தாலும் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு இன்னும் ஆபத்துதான்.. சிவ சேனா

கொரோனாவின் பெரிய ஹாட்ஸ்பாட்டாக உத்தர பிரதேசம் பார்க்கப்படுகிறது, அயோத்தி வேறு இல்லை. உத்தர பிரதேச அமைச்சர் ஒருவர் கொரோனா பலியாகி உள்ளார். மேலும் அம்மாநிலத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி நாளை (இன்று) ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார் அது அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும், மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஷோஷி தொடங்கிய ராமர் கோயிலுக்கான போராட்டத்தின் திருப்திகரமான முடிவை குறிக்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.