’3,054 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் அடிக்கல் நாட்டல்’ மோடிக்கு அமித்ஷா வாழ்த்து

 

’3,054 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் அடிக்கல் நாட்டல்’ மோடிக்கு அமித்ஷா வாழ்த்து

’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கத்தை திராவிடக் கட்சிகள் முன் வைத்து தென்னிந்திய உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தன. அதேபோல இந்தியாவின் பல பிரதேசங்கள் தங்கள் பகுதி வளர்ச்சிக்காகப் போராடி வருகின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அடிப்படை வசதிகள் உள்பட பல விஷயங்களில் முன்னேற வேண்டியிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுவர். அம்மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று.

’3,054 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் அடிக்கல் நாட்டல்’ மோடிக்கு அமித்ஷா வாழ்த்து

மணிப்பூரின் முதன்மையான தேவை தண்ணீர். அங்குள்ள குடும்பங்களுக்கு குடிநீர் தேவையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு பல விதங்களில் முயற்சி எடுத்துவருகிறது. அவற்றில் ஒன்று ஜல் ஜீவன் இயக்கம். இதன்மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்துக் குடும்பங்களும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது.

அதன்பகுதியாக, மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு அடிகல் நாட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தத் திட்டம் அம்மாநிலத்தில் உள்ள கிரேட்டர் இம்பால் பகுதியில் உள்ள 25 நகரங்கள், 1500 க்கும் மேற்பட்ட கிராமக்குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீர் வழங்கும். மேலும், இன்னும் நான்கு ஆண்டுகளில் மணிப்பூரின் அடுத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு எனும் இலக்கை அடைய உதவும். இந்தத் திட்டத்தின் மதிப்பு 3054 கோடி ரூபாய்.

’3,054 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் அடிக்கல் நாட்டல்’ மோடிக்கு அமித்ஷா வாழ்த்து

இதை மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டில்,  வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கு மோடி அரசு பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவருகிறது.  இன்று 3054 கோடி ரூபாய் மதிப்புள்ள மணிப்பூர் வாட்டர் சப்ளை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கும் பிரதமருக்கு வாழ்த்துகள்’ என்பதாகப் பதிவிட்டுள்ளார்.