தமிழகத்துக்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்.. ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!

தமிழகத்துக்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்.. ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆளும் அரசான அதிமுகவுடன், தேசிய கட்சியான பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுகவின் முக்கிய தொகுதிகளில் கை வைத்திருக்கும் பாஜக, 40 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதை கொடுக்க மறுத்த அதிமுக 20 தொகுதிகள் மட்டுமே கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம்.

தமிழகத்துக்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்.. ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!

இதனிடையே தென் மாநிலங்களில் காலூன்ற எண்ணியிருக்கும் பாஜக, தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. புதுச்சேரி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டது. அதே போல, தமிழகத்திலும் பல பிளான்களை போட்டிருக்கிறது பாஜக. அதில் ஒன்று தான் சசிகலா அரசியல் பின்வாங்கல் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்துக்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்.. ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!

திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பது தான் பாஜகவின் குறிக்கோள். அதனை தடுத்து விட்டால், அதிமுக வெற்றி பெற்று பாஜகவின் ஆதிக்கம் இங்கு அமலாகும். இதை செயல்படுத்தும் விதமாக, பாஜகவின் தேசிய தலைவர்களே தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்துக்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்.. ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!

முதன் முதலில் தேர்தலுக்காக அமித்ஷா வந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இரண்டு முறை வந்து சென்று விட்டார். அதே போல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

தமிழகத்துக்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்.. ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக!

இந்த நிலையில், வரும் 7ம் தேதி மீண்டும் தமிழகம் வரவிருக்கும் அமித்ஷா கன்னியாகுமரி, நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி ஜே.பி.நட்டா மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.