பாகிஸ்தானும், சீனாவும் எதை விரும்புகிறதோ அதை நீங்கள் சொல்கிறீர்கள்… ராகுல் காந்தியை தாக்கிய அமித் ஷா

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடனான மோதலின்போது இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அது முதல் (கடந்த 15ம் தேதி முதல்) ராகுல் காந்தி தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டிவிட்டுகளால் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதியன்று நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி என டிவிட் செய்து இருந்தார். இது டிவிட்டரில் டிரெண்டானது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்த டிவிட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது பதில் அளித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அமித் ஷா கூறியதாவது: ஆம். நாம் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை கையாளும் திறனை கொண்டுள்ளோம். ஆனால் ஒரு பெரிய அரசியல் கட்சியின் முன்னாள் தலைவர், பிரச்சினைகளின் போது மேலாட்டமான எண்ணத்தில் அரசியல் செய்யும் போது அது வேதனையளிக்கிறது. அவரது ஹேஷ்டேக்கை பாகிஸ்தான் மற்றும் சீனா பார்வேர்டு செய்வதை, அவரும், காங்கிரசும் சுயமாக ஆராய வேண்டிய விஷயம். நெருக்கடியான (எல்லை கட்டுப்பாட்டு பகுதி பிரச்சினை) இந்த நேரத்தில் சீனாவும், பாகிஸ்தானும் எதை விரும்புகிறதோ அதை நீங்கள் கூறுகிறீர்கள்.

சீனா, பாகிஸ்தான்

லடாக் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்திற்கு அரசு முழுமையாக தயாராக இருந்தது. ஒரு விவாதத்துக்காக யாரும் வெட்கப்படுவதில்லை. நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது. கலந்துரையாடலாம். 62 முதல் இப்போது வரை விவாதிப்போம். ஆனால் அதே நேரத்தில் நமது வீரர்கள் எல்லையில் அதை எதிர்த்து போராடுகிறார்கள் மற்றும் அரசும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சாதகமான அறிக்கையை நாம் கொடுக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு: ஜூலை 8 ஆம் தேதி விசாரணை

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்...

நெய்வேலி என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஒன்றாம் தேதி...

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை!

சென்னையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை ஒன்று ரூ.11 லட்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 55 வயதான அன்பழகன், கடந்த16ஆம் தேதி, மூச்சுத்திணறல்...

தொடரும் அடாவடி: புதுக்கோட்டையில் ஓட்டுநரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்!

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இரு வாரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்...
Open

ttn

Close