சகோதரி, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசால் ஊடுருவல்களை தடுக்க முடியுமா?.. அமித் ஷா கேள்வி

 

சகோதரி, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசால் ஊடுருவல்களை தடுக்க முடியுமா?.. அமித் ஷா கேள்வி

சகோதரி (மம்தா பானர்ஜி), கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசால் ஊடுருவல்களை தடுக்க முடியுமா? என மேற்கு வங்க மக்களிடம் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்கம் அஸ்கிராமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: பெங்காலில் இன்று (நேற்று) பல இடங்களுக்கு சென்றேன்.மே 2ம் தேதியன்று சகோதரி ஆட்சியிலிருந்து வெளியேறுவார், நடைபெற்று வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. ஆட்சியை அமைக்கும் என்பதை உறுதி செய்தது. மாநிலத்தில் கட் மணி, சிண்டிகேட் மற்றும் திருப்திப்படுத்துதலை செயல்படுத்திய மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

சகோதரி, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசால் ஊடுருவல்களை தடுக்க முடியுமா?.. அமித் ஷா கேள்வி
மம்தா பானர்ஜி

பெங்காலில் வாழும் ஒரு மக்கள் ஊடுருவல்காரர்கள். அவர்கள் சகோதரியால் மிகவும் நேசிக்கப்படுகிறார்கள். இரண்டாவது தரப்பினர், சொந்த பண்டிகையை கொண்டாட சொந்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் என்னையும், உங்களையும் போன்றவர்கள். நமசுத்ரா மற்றும் மாதுவா சமுதாய சேர்ந்த என் சகோதரர்கள் குடியுரிமை பெறவில்லை. ஆஸ்கிராம மக்களே, மேற்கு வங்கத்தில் ஊடுருவலை நிறுத்த வேண்டுமா அல்லது இல்லையா? என்று உங்களிடம் கேட்க நான் வந்துள்ளேன்.

சகோதரி, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசால் ஊடுருவல்களை தடுக்க முடியுமா?.. அமித் ஷா கேள்வி
கம்யூனிஸ்ட், காங்கிரஸ்

சகோதரி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளால் அவர்களை (ஊடுருவல்காரர்கள்) தடுக்க முடியுமா? மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை நுழைய விடாமல் தடுக்க முடியும் என்றால் அது பா.ஜ.க. அரசாங்கம்தான் இருக்கும். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பறவை கூட மேற்கு வங்கத்தின் எல்லைக்குள் நுழைய முடியாது. முதல்வர் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும், நமசுத்ரா மற்றும் மாதுவா சமுதாய மக்களுக்கு பா.ஜ.க. குடியுரிமை அந்தஸ்து வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.