ஆட்சியில் இருக்கும்போது ஏன் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கவில்லை… காங்கிரசுக்கு அமித் ஷா கேள்வி

ஆட்சியில் இருக்கும்போது ஏன் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கவில்லை… காங்கிரசுக்கு அமித் ஷா கேள்வி

நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சிக்கு அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்று இருந்தார். அவரது பயணத்தின் கடைசி நாளான நேற்று பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கலால் நேரு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக பணியாற்ற நரேந்திர மோடி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் வருவாயை பல மடங்கு அதிகரிக்கும்.

ஆட்சியில் இருக்கும்போது ஏன் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கவில்லை… காங்கிரசுக்கு அமித் ஷா கேள்வி
காங்கிரஸ்

தற்போது நாட்டின் மற்றும் உலகின் எங்கு வேண்டுமானாலும் தங்களது விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் வழங்கவில்லை அல்லது பிரதமர் பாசல் பிமா திட்டம் அல்லது எத்தனால் கொள்கையில் திருத்தம் செய்யவில்லை?. ஏனென்றால் உங்கள் நோக்கம் தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆட்சியில் இருக்கும்போது ஏன் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கவில்லை… காங்கிரசுக்கு அமித் ஷா கேள்வி
விவசாயிகளுக்கு உதவி தொகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பாகல்கோட் மாவட்டத்தில் கேதர்நாத் சுகர் அண்டு அக்ரோ புரோடுக்ட் நிறுவனத்தின் எத்தனால் திட்டத்தை தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டத்தில் அதிவிரைவு படை பிரிவு மையம் கட்டுமானத்துக்கான அடிக்கலை அமித் ஷா நாட்டினார்.