‘நிவர் புயல் பாதிப்பு’ குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித்ஷா!

 

‘நிவர் புயல் பாதிப்பு’ குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித்ஷா!

கடந்த 21ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வந்தது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இந்த புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டனர். பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

‘நிவர் புயல் பாதிப்பு’ குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித்ஷா!

நள்ளிரவில் புயல் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு மரக்காணம்- புதுச்சேரி இடையே புயல் கரையைக் கடந்தது. இந்த புயல், கடலூர் மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் முதல்வர் இன்று பிற்பகல் நேரில் சென்று ஆய்வு செய்யவிருக்கிறார்.

‘நிவர் புயல் பாதிப்பு’ குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித்ஷா!

இந்த நிலையில், நிவர் புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் பழனிசாமியிடமும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் என உறுதியளித்ததாக அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.