மம்தா சகோதரி உங்களை தோற்கடிக்க யாரும் டெல்லியில் இருந்து யாரும் வர வேண்டியதில்லை.. அமித் ஷா பதிலடி

 

மம்தா சகோதரி உங்களை தோற்கடிக்க யாரும் டெல்லியில் இருந்து யாரும் வர வேண்டியதில்லை.. அமித் ஷா பதிலடி

மம்தா சகோதரி (தீதி) உங்களை தோற்கடிக்க யாரும் டெல்லியில் இருந்து யாரும் வர வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்று இருந்தார். அமித் ஷாவின் வருகை அம்மாநில பா.ஜ.க.வினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டங்களில் பங்கேற்ற அமித் ஷா, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், முதல்வர் மம்தா பானாஜியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மம்தா சகோதரி உங்களை தோற்கடிக்க யாரும் டெல்லியில் இருந்து யாரும் வர வேண்டியதில்லை.. அமித் ஷா பதிலடி
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தற்போது தான் பேசும் கூட்டங்களில் பா.ஜ.க.வை வெளிமாநில கட்சி என்று அடிக்கடி கூறி வருகிறார். இதற்கு அமித் ஷா நேற்று பதிலடி கொடுத்தார். மேற்கு வங்கத்தில் பிர்பம் மாவட்டம் போல்பூரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பேரணியில் கலந்து கொண்ட பிறகு அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மம்தா சகோதரி உங்களை தோற்கடிக்க யாரும் டெல்லியில் இருந்து யாரும் வர வேண்டியதில்லை.. அமித் ஷா பதிலடி
பா.ஜ.க.

மம்தா தீதி (சகோதரி) உங்களை தோற்கடிக்க டெல்லியிலிருந்து யாரும் இருந்து வர வேண்டியது இல்லை. ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு மாநிலத்துக்கு செல்ல முடியாத ஒரு நாட்டை மம்தா சகோதரி விரும்புகிறாரா? இத்தகைய பழமைவாத சிந்தனையை வங்க மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.