பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

சோனியா மற்றும் ராகுல் காந்தி கோவாவில் விடுமுறை கழிக்க வேண்டியது. அப்புறம் அவர்கள் (காந்தி குடும்பத்தினர்) பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள் என்று அமித் மால்வியா கிண்டல் செய்துள்ளார்.

டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியை வெளியே தங்கும்படி சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி சோனியா காந்தியை அழைத்து கொண்டு கோவா சென்றுள்ளார். இன்னும் சில தினங்களுக்கு அவர்கள் அங்கு தங்கியிருப்பார்கள் என தெரிகிறது. பிரியங்கா காந்தி இமாச்சல பிரதேசத்தில் உள்ளதாக தகவல். காங்கிரஸின் பிம்பங்களாக கருதப்படும் இந்த 3 பேரும் ஓய்வில் உள்ளார்கள்.

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா
அமித் மால்வியா

அதேசமயம் பா.ஜ.க. தலைவர்களோ பல மாநிலங்களில் கட்சியின் அரசியல் தடத்தை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். உதாரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வருகை புரிந்தார். அது பா.ஜ.க.வினருக்கு பெரிய உத்வேகம் அளித்துள்ளது. இதனை மேற்கோள்காட்டி சோனியா காந்தி குடும்பத்தினரை பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா கிண்டல் அடித்துள்ளார்.

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா
அமித் ஷா, ஜே.பி.நட்டா

அமித் மால்வியா டிவிட்டரில், சோனியா மற்றும் ராகுல் காந்தி கோவாவில் விடுமுறை எடுக்கின்றனர், பிரியங்கா காந்தி இமாச்சல பிரதேசத்தில் உள்ளபோது, பா.ஜ.க.வின் அரசியல் தடத்தை விரிவுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார், பின் மேற்கு வங்கம் செல்கிறார். கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா 100 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்புறம் அவர்கள் (சோனியா காந்தி குடும்பத்தினர்) பா.ஜ.க ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.