பெகாசஸ் விவகாரம்.. அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்று காங்கிரஸ் கருதுகிறது.. பா.ஜ.க. பதிலடி

பெகாசஸ் விவகாரம்.. அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்று காங்கிரஸ் கருதுகிறது.. பா.ஜ.க. பதிலடி

சர்வதேச ஊடக கூட்டமைப்பு ஒன்று நேற்று முன்தினம், இந்தியாவில் 2 மத்திய அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸ் மூலம் ஹேக்கிங் செய்ய இலக்கு வைக்கப்பட்டு இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரம்.. அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்று காங்கிரஸ் கருதுகிறது.. பா.ஜ.க. பதிலடி

இந்த செய்தியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை வேவு பார்ப்பதில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஜே.பி.சி. விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன், அமித் ஷா சஹாப் ராஜினாமா செய்ய வேண்டும். மோடி சஹாப் மீது விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெகாசஸ் விவகாரம்.. அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்று காங்கிரஸ் கருதுகிறது.. பா.ஜ.க. பதிலடி
காங்கிரஸ்

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவின் தேசிய தலைவர் அமித் மால்வியா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: போபர்ஸ் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழுவால் குத்தப்பட்ட காங்கிரஸ், அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்று கருதுகிறது. இந்த அறிக்கை ஆதாரமற்றது என்று அவையில் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த விஷயம் (சட்ட விரோத உளவு பார்த்தல்) கடந்த காலத்திலும் வந்துள்ளது. இந்த நேரத்தில் புதிதாக எதுவும் இல்லை. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை நடக்காமல் தடுப்பற்கான இது ஒரு ஒருங்கிணைந்த முயற்சி. ஒவ்வொரு முறையும் இது போன்ற புனையப்பட்ட கதைகள் ஊடகங்களுக்கள் நுழைகின்றன. இது விதிவிலக்கல்ல இவ்வாறு அவர் தெரிவித்தார்.