மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு!

மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். முதல் அலையை விட இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு!

மேற்கு வங்கத்திலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற மே 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு!

1.தனியார் வாகனங்கள், டாக்சிகள், பேருந்துகள் மற்றும் கொல்கத்தா மெட்ரோ சேவைகள் ரத்து

2.உள்ளூர் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் அவசர அத்தியாவசிய சேவை ஊழியர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு தடை

3.ஷாப்பிங் வளாகங்கள், மால்கள், உணவகங்கள், வரவேற்புரைகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் மூடல்

மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு!

4.அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடல்

5.அனைத்து அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் மூடப்படும்

6.அத்தியாவசிய அவசர சேவைகள் செயல்பட அனுமதி. சில்லறைக் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதி. பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்