திருப்பதி கோயிலின் சொத்துக்களை விற்க கூடாது : ஆந்திர அரசு

 

திருப்பதி கோயிலின் சொத்துக்களை விற்க கூடாது : ஆந்திர அரசு

நாட்டின் மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று கூறப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். இங்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் கோயிலுக்கு சுமார் 2500 கோடி ஆண்டுவருமானமாக வருகிறது.

திருப்பதி கோயிலின் சொத்துக்களை விற்க கூடாது : ஆந்திர அரசு

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி கோயில் மூடப்பட்டு பக்தர்கள் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலுக்கு பலகோடி ரூபாய் வருமானம் தடைப்பட்டு விட்டதாக தெரிகிறது.

இதுவொருபுறமிருக்க திருப்பதி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்திலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 23 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றை ஏலம் விடபோவதாக தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பாஜக, இந்து அமைப்புகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்கக் கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.