அமெரிக்காவின் முதல் திருநங்கை செனட்டர்! குவியும் வாழ்த்துகள்

 

அமெரிக்காவின் முதல் திருநங்கை செனட்டர்! குவியும் வாழ்த்துகள்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார். இருவரில் அதிபராவது யார் என்ற கேள்வி எல்லோரின் முன் உள்ள ஒரே கேள்வி.

அமெரிக்காவின் முதல் திருநங்கை செனட்டர்! குவியும் வாழ்த்துகள்

இப்போதைய நிலைமைப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 238 இடங்களிலும் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் 213 இடங்களில் முன்னிலையில் உள்ளார்கள். அடுத்த அதிபர் யாரென்று முடிவாவதில் குழப்பங்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது.

அமெரிக்காவின் முதல் திருநங்கை செனட்டர்! குவியும் வாழ்த்துகள்

இந்நிலையில் அமெரிக்காவில் மிக முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவில் டெலாவேர் எனும் மாகாணத்தில் செனட்டர் பதவிக்குப் போட்டியிட்டார் சாரா மெக்பிரைட் எனும் திருநங்கை. இதுவரை அமெரிக்காவில் திருநங்கை யாரும் செனட்டர் பதவிக்குத் தேர்வானதே இல்லை. அமெரிக்க அதிபராக ஒரு பெண் இதுவரை தேர்வாக வில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட மெக்பிரை இந்தத் தேர்தலில் பெருவாரியான வெற்றியைப் பெற்று, அமெரிக்காவின் முதல் திருநங்கை செனட்டராகி இருக்கிறார். இவருக்கு 91.31 சதவித வாக்குகள் கிடைத்தது என்பது பெருமைக்கு உரிய விஷயமாகும்.

அமெரிக்காவின் முதல் திருநங்கை செனட்டர்! குவியும் வாழ்த்துகள்

அமெரிக்க அரசியல் களத்தில் முதல் திருநங்கையாக காலடி வைத்திருக்கும் சாரா பெக்பிரைட் போல இன்னும் அதிகமானவர்கள் வர, இந்த வெற்றி உதவும் என்கிறார்கள். சாராவுக்கு உலகின் பல மூலைகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.