3 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த அமெரிக்கா!

 

3 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த அமெரிக்கா!

உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பு நடுநடுங்க வைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 884 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரத்து 871 நபர்கள்.

3 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த அமெரிக்கா!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 11 ஆயிரத்து 637 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  நேற்று  மட்டுமே  10,758 பேர் உலகளவில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,00,05,979 பேர்.

அமெரிக்காவில் 1,65,49,366 பேர் கொரோனாவால் பாதிக்கப்படிருக்கிறார்கள். நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அதேபோல தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 2,500 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

3 லட்சம் பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த அமெரிக்கா!

நேற்று மட்டுமே  2,20,298 பேர் அமெரிக்காவில் புதிய நோயாளிகளாக அதிகரித்து விட்டனர். மேலும், நேறு மட்டுமே அமெரிக்காவில் 2,309 பேர் மரணமடைந்துள்ளனர். இதை அடுத்து அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை3,05,082 பேர்.

கலிபோர்னியா, டெக்ஸாஸ், ப்ளோரிடா ஆகிய மாகாணங்களே கொரோனா பாதிப்பில் முன்னிலையில் இருப்பவை. ஆனால், அதிக மரணங்கள் நடந்த மாகாணம் நியூயார்க்.