சாரி தெரியாம நடந்திருச்சு… தலிபான்களிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா!

 

சாரி தெரியாம நடந்திருச்சு… தலிபான்களிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா!

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும் ஆகஸ்ட் 31 வரை காபூல் விமான நிலையம் அமெரிக்க வீரர்களின் கன்ட்ரோலில் தான் இருந்தது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததால் தான் பல்வேறு நாட்டு அரசுகளும் தங்கள் மக்களை காபூல் விமான நிலையத்திலிருந்து பத்திரமாக மீட்டனர். இதனிடையே மீட்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது.

சாரி தெரியாம நடந்திருச்சு… தலிபான்களிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா!

உளவுத்துறை எச்சரித்தபடியே ஆகஸ்ட் 26ஆம் தேதி காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் உள்ளிட்ட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் கோராசன் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்குப் பின் பழிக்குப் பழி நடவடிக்கையாக அமெரிக்க அரசு ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் டாப் கமாண்டர்கள் மரணித்ததாகவும் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா அறிவித்தது.

சாரி தெரியாம நடந்திருச்சு… தலிபான்களிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா!

ஆனால் இந்தத் தாக்குதலின்போது துரதிருஷ்டவசமாக பொதுமக்கள் 10 பேரும் மரணித்தனர். “காபூல் விமான நிலையத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் எந்த முன் அறிவிப்பையும் அமெரிக்கா எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. இதனை அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும்” என தலிபான்கள் குற்றஞ்சாட்டினர். அதற்கு தற்போது இந்த ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா தலிபான்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ட்ரோன் தாக்குதல் தவறான ஒன்று என்பதால் மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.