செருப்பைத் தூக்கி வரும்படி ஆம்பூர் எம்.எல்.ஏ கூறவில்லை! – தி.மு.க பிரமுகர் விளக்கம்!

 

செருப்பைத் தூக்கி வரும்படி ஆம்பூர் எம்.எல்.ஏ கூறவில்லை! – தி.மு.க பிரமுகர் விளக்கம்!

ஆம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ தன்னுடைய செருப்பை பட்டியலின சமூக நிர்வாகியை விட்டு தூக்கி வரச் சொன்னதாக செய்தி பரவி வரும் நிலையில், சொருப்பைத் தூக்கி வரும்படி எம்.எல்.ஏ கூறவில்லை. நான் தூக்கி வந்ததைக் கவனித்த அவர் கீழே போட சொன்னார் என்று கூறியுள்ளார் வெங்கடசமுத்திரம் ஊராட்சி தி.மு.க செயலாளர் சங்கர்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “எம்.எல்.ஏ வில்வநாதன் உடன் நான் எப்போதும் இருப்பேன். பொன்னப்பள்ளி தடுப்பணையைப் பார்வையிட பைக்கில்தான் எம்.எல்.ஏ வந்தார். வழியில் சேறும் சகதியுமாக இருந்ததால் செருப்பை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு நடந்தார். நான் செருப்பை எடுத்துக்கொண்டு அவர் பின்னால் நடந்தேன்.

செருப்பைத் தூக்கி வரும்படி ஆம்பூர் எம்.எல்.ஏ கூறவில்லை! – தி.மு.க பிரமுகர் விளக்கம்!
Source: Vikatan

சிறிது தூரம் போன நிலையில் அவர் நிலை தடுமாறினார். நான் அவரை தாங்கிப் பிடித்தேன். அப்போதுதான் என் கையில் செருப்பு இருப்பதை அவர் பார்த்தார். உடனடியாக அதைக் கீழே போடச் சொன்னார். பிறகு தடுப்பணையைப் பார்வையிட்டு வந்து செருப்பு அணிந்து கொண்டு திரும்பினோம். இது தெரிந்தும் யாரோ வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பியுள்ளனர்.

செருப்பைத் தூக்கி வரும்படி ஆம்பூர் எம்.எல்.ஏ கூறவில்லை! – தி.மு.க பிரமுகர் விளக்கம்!

சாதி பார்த்து பழகக்கூடியவர் இல்லை எம்.எல்.ஏ. நான் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால் என்னை வைத்து அவர் வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறார்கள். இத்தனை ஆண்டு பழக்கத்தில் அவருடைய இல்லத்துக்கு பல முறை சென்றிருக்கிறேன். அவரும் என் இல்லத்துக்கு வந்திருக்கிறார். ஒன்றாக சாப்பிடுவார். தி.மு.க மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் இப்படி அவதூறு பரப்புகிறார்கள். எனக்கு 47 வயதாகிறது, எனக்கும் சுய சிந்தனை உள்ளது. எம்.எல்.ஏ அண்ணனுக்கு மனித மாண்பு உள்ளது” என்றார்.