“இறந்தாலும் கொரானாவால் இறக்க கூடாது”-சடலத்தை சாலையில் வீசிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர் ..

“இறந்தாலும் கொரானாவால் இறக்க கூடாது”-சடலத்தை சாலையில் வீசிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர் ..

கொரானாவால் இறந்தவரின் சடலத்தை ஒரு ஆம்புலன்ஸ் ஊழியர் நடுரோட்டிலேயே வீசிவிட்டு சென்ற கொடுமை மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளதால் ,”இறந்தாலும் மனிதன் கொரானாவால் இறக்கக்கூடாது” என சோகமாக பாடத்தோன்றுகிறது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 50 வயது நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார் ,அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சையினை பீப்பிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வந்தது .

“இறந்தாலும் கொரானாவால் இறக்க கூடாது”-சடலத்தை சாலையில் வீசிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர் ..
இந்நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகியதால் பீப்பிள் ஹாஸ்ப்பிட்டலிலிருந்து அவரை சிராயு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க முடிவு பண்ணி ,அங்கு மாற்ற ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டது .ஆனால் ஆம்புலன்ஸ் சிராயு மருத்துவமனை அருகே சென்ற போது அவரின் உயிர் பிரிந்து விட்டது .இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர் அவரை நடுரோட்டிலேயே வீசிவிட்டு சென்று விட்டார் .இதனால் சாலையில் போவோர் அந்த சடலத்தை அச்சத்துடன் பார்த்தபடி சென்றனர் .

“இறந்தாலும் கொரானாவால் இறக்க கூடாது”-சடலத்தை சாலையில் வீசிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர் ..
உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனையின் பிணக்கிடங்கில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .இந்த சம்பவம் பற்றி ஆம்புலன்ஸ் ஊழியர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் .