‘அம்பேத்கர் வழியில் திமுக கடமையாற்றும்’ : மு.க.ஸ்டாலின் உறுதி!

 

‘அம்பேத்கர் வழியில் திமுக  கடமையாற்றும்’ : மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர், இறக்கும் காலம் வரை சமூக நீதிக்கு குரல் கொடுத்தவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். பொருளாதாரம், நீதித் துறை, அரசியல் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்த இவர் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தனது 65ஆவது வயதில் மறைந்தார்.

‘அம்பேத்கர் வழியில் திமுக  கடமையாற்றும்’ : மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்த ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை மத்திய அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது . இதனால் மத்திய அரசின் அலுவலங்களுக்கு இன்று பொது விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கம் என்பதால் இங்கு ஏற்கனவே விடுமுறை நாளாக ஏப்ரல் 14 ஆம் தேதி உள்ளது.

‘அம்பேத்கர் வழியில் திமுக  கடமையாற்றும்’ : மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்நிலையில் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கர். அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும்” என்றார்.