அம்பத்தூர்: பாட்டியின் செயினை அறுத்த புதுத்திருடன் – அட்டிகா மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸில் தங்க கட்டியானது

அம்பத்தூர்: பாட்டியின் செயினை அறுத்த புதுத்திருடன் – அட்டிகா மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸில் தங்க கட்டியானது

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பட்டப்பகலில் 7 சவரன் தாலி சங்கிலியையும் மற்றுமொரு இடத்தில் 3 சவரன் தங்க செயினையும் வழிப்பறி செய்தவன் அவற்றை அட்டிகா கோல்டு நிறுவனத்தில் வைக்க, அட்டிகா மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்குப் போய் தங்க கட்டியான நகைகளை மீண்டும் நகைகளாக மாற்றி மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைத்தனர் அம்பத்தூர் போலீசார்.

அம்பத்தூர்: பாட்டியின் செயினை அறுத்த புதுத்திருடன் – அட்டிகா மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸில் தங்க கட்டியானது

மதுரையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்காக குடிபெயர்ந்த காளிதாஸ் (26 ) தன் தாயுடன் வசித்து வருகிறார் டிப்ளமோ படித்து வேலையின்றி தவித்து வந்த நிலையில் வருமானம் இல்லாததால் தான் முதல் முறையாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தாக காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

காளிதாசிடமிருந்து வழிப்பறி செய்த 13 சவரன் தங்க நகைகளையும் திருட்டுக்கு பயன்படுத்திய OLA இரு சக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான OLA பைக்கை தினசரி 1000 ரூபாய் வாடகைக்கு எடுத்து வெவ்வேறு பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தனிப்படை விசாரணை நடத்தியதில் தெரியவந்துள்ளது.

அம்பத்தூர்: பாட்டியின் செயினை அறுத்த புதுத்திருடன் – அட்டிகா மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸில் தங்க கட்டியானது

அம்பத்தூரில் கடந்த 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு விஜயலட்சுமிபுரம் பாரதி நகரில் அன்னிபெசன்ட் தெருவில் நடந்து கோவிலுக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த ராமலட்சுமி(60) என்பவரிடம் 7 சவரன் தாலிச் செயின் 3 சவரன் மற்றொரு செயின் என 2 தங்க சங்கிலியை பறித்த குற்றவாளியை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருடிய தங்க நகைகளை அட்டிகா கோல்டு நிறுவனத்தில் விற்பனை செய்து அந்த நகை தற்போது கல்யாண் ஜூவல்லர்ஸ் -இல் உருக்கப்பட்டு தங்க கட்டியாக மாற்றப்பட்டதும் காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது

அம்பத்தூர்: பாட்டியின் செயினை அறுத்த புதுத்திருடன் – அட்டிகா மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸில் தங்க கட்டியானது

மேலும் குற்றவாளி முதல் முறையாக குற்ற சம்பவத்தில் பணியில் காவல்துறையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த நிலையில் சென்னை
வில்லிவாக்கம், அம்பத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட OLA பைக்கை பயன்படுத்தி உளவு பார்த்ததும் தெரியவந்தது.

மேலும் அட்டிகா கோல்ட் நிறுவனம் மூலம் விற்கப்பட்ட தங்க நகையை செயின்களாக மீண்டும் மீட்கப்பட்டு அம்பத்தூர் தனிப்படை போலீசார் மொத்தம் 13 சவரன் தங்க நகைகளை அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அவர்களிடம் ஒப்படைத்து பின்னர் பொன்னேரி துணை சிறையில் அடைக்கப்பட்டார் காளிதாஸ்.