பொதுமக்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்

 

பொதுமக்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்

சென்னை

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யுமாறுபோலீசாருக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, சென்னை குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரைமாநகர், சதானந்தபுரம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்களிடம், அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது,செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறக்கும் அளவிற்கு இன்னும் வரவில்லை என்றும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் கூறிய தீபா சத்யன், தண்ணீர் திறக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்

இதனிடையே, ஏரி திறக்கப்பட்டதாக வந்த தகவலின் பேரில் அச்சத்தில் உறைந்த மூதாட்டி ஒருவருக்கு ஆறுதல் கூறிய தீபா சத்யன், அவருக்கு உணவுப் பொருட்களை வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்தார். துணை ஆணையரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர.