நாங்க பா.ஜ.க. கூட்டணியில் சேர மாட்டோம்.. அது எல்லாம் சந்திரபாபு நாயுடு பரப்பும் வதந்தி.. ஜெகன் மோகன் கட்சி விளக்கம்

நாங்க பா.ஜ.க. கூட்டணியில் சேர மாட்டோம்.. அது எல்லாம் சந்திரபாபு நாயுடு பரப்பும் வதந்தி.. ஜெகன் மோகன்  கட்சி விளக்கம்

நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் சேர முயற்சி செய்வதாக தெலுங்கு தேசம் கட்சி வதந்திகளை பரப்புகிறது என ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுத்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி, தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி பிரதமரை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்ததாகவும், பா.ஜ.க. தலைமையிலனா தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சேர முயற்சிப்பதாகவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

நாங்க பா.ஜ.க. கூட்டணியில் சேர மாட்டோம்.. அது எல்லாம் சந்திரபாபு நாயுடு பரப்பும் வதந்தி.. ஜெகன் மோகன்  கட்சி விளக்கம்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி

ஆனால் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர மாட்டோம் என ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பதி ராம்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில பிரிவினைக்கு பிறகு, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் நமது மாநிலம் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லை. தெலுங்கு தேசம் ஆட்சியில் மாநிலத்தின் நிலைமை மோசமாக இருந்தது.

நாங்க பா.ஜ.க. கூட்டணியில் சேர மாட்டோம்.. அது எல்லாம் சந்திரபாபு நாயுடு பரப்பும் வதந்தி.. ஜெகன் மோகன்  கட்சி விளக்கம்
அம்பதி ராம்பாபு

மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக பணியாற்றி வருகிறார். அதில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் சந்திப்பும் அடங்கும். ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர முயற்சிக்கிறது என்று தெலுங்கு தேச தலைவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அது முற்றிலும் முட்டாள்தனமானது. ஜெகன் மோகன் ரெட்டி மீதான வழக்குகள் தொடர்பாக அவர்கள் (தெலுங்கு தேசம்) கடந்த பத்து ஆண்டுகளாக வம்பு செய்கிறார்கள். ஆனால் ஜெகன் இது போன்ற வழக்குகளுக்கு பயப்படுவதில்லை. அவர் வழக்குகளை தைரியமாக எதிர்கொண்டு கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.