முறைகேடாக விற்பனை செய்த 1.25 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது

 

முறைகேடாக விற்பனை செய்த 1.25 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது

சென்னை

அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் சுமார் 1.25 டன் அளவிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்ன அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், ஆவடி, மிட்டனமல்லி, பாலவேடு ஆகிய இடங்களில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.இதுதொடர்பாக துணை ஆணையர் தீபாசத்யன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

முறைகேடாக விற்பனை செய்த 1.25 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது

இதனையொட்டி கடந்த 2 நாட்களாக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், மளிகைக்கடை, இனிப்பு கடை, பலசரக்கு கடைகளில் குட்கா பொருட்களை, பதுக்கிவைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்த கொரட்டூர் கருக்கு பகுதியில் கடைக்குள் மறைத்து விற்பனை செய்துவந்த பொன்ராஜ் என்பவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஆவடி மிட்னமல்லி பகுதியில் 350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக நீதிமான் என்பரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.