அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்…உரிமையாளர் மர்ம மரணம் – வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்!

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்…உரிமையாளர் மர்ம மரணம் – வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்!

அம்பானியின் பிரமாண்ட வீடான அண்டிலாவுக்கு அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் மர்ம நபர் நிறுத்திவைத்த கார் குறித்த விவகாரம் ஒரு வார காலமாக மும்பை உலுக்கிவருகிறது. குறிப்பாக கடந்த வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்ட காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரென் திடீரென்று ஒரு சிற்றோடையில் இறந்துகிடந்தது அனைவரையும் அதிரச் செய்தது. சினிமாவின் வில்லத்தனங்களைக் காட்டிலும் அதிபயங்கர காட்சியாக மும்பையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்…உரிமையாளர் மர்ம மரணம் – வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்!

அப்போதிருந்தே இந்த வழக்கை மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றக்கோரி எதிர்கட்சியான பாஜக வலியுறுத்திவந்தது. ஆனால் அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இவ்வழக்கில் உண்மைய வெளிக்கொணர மும்பை போலிஸிடம் திறமை இருப்பதாகக் கூறினார். இச்சூழலில் மும்பை போலிஸின் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடமிருந்து இந்த வழக்கு என்ஐஏவுக்கு இன்று மாற்றப்பட்டது. தற்போது என்ஐஏ மறு வழக்கு பதிந்து இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தவுள்ளது.

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்…உரிமையாளர் மர்ம மரணம் – வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்!

முன்னதாக, காரை நிறுத்தியது தாங்கள் தான் என ஜெய்ஷ்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பு ஒப்புக்கொண்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அதனை முற்றிலும் மறுத்த அந்த அமைப்பு அம்பானி எங்கள் டார்கெட் கிடையாது; இஸ்லாமியர்களை ஒடுக்கிவரும் மோடியும் பாஜகவுகும் தான் எங்கள் டார்கெட் என்று பகீரங்கமாகக் கூறியது கவனிக்கத்தக்கத்து.