ஊரடங்கு விளைவு: 50 ஆயிரம் தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தும் அமேசான் இந்தியா

 

ஊரடங்கு விளைவு: 50 ஆயிரம் தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தும் அமேசான் இந்தியா

டெல்லி: அமேசான் இந்தியா நிறுவனம் 50 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை பணியமர்த்த உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் குவிவதால் அதை நிறைவேற்ற அதிக பணியாளர்கள் இல்லாமல் இ-காமர்ஸ் நிறுவனங்கள் திணறி வருகின்றன. ஏனெனில் பல ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலம், சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

ஊரடங்கு விளைவு: 50 ஆயிரம் தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தும் அமேசான் இந்தியா

இந்நிலையில், அமேசான் இந்தியா நிறுவனம் 50 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை பணியமர்த்த உள்ளது. குறிப்பாக பொருட்களை டெலிவரி செய்வதற்காக அதிக தற்காலிக பணியாளர்களை நியமிக்க உள்ளதாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொண்டு இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்த நடவடிக்கை உதவும் என அந்நிறுவன துணை தலைவர் சக்சேனா கூறியுள்ளார்.