ஒரு பில்லியன் டாலருக்கு ஸுக்ஸ் சுய-ஓட்டுநர் நிறுவனத்தை வாங்கும் அமேசான்

 

ஒரு பில்லியன் டாலருக்கு ஸுக்ஸ் சுய-ஓட்டுநர் நிறுவனத்தை வாங்கும் அமேசான்

கலிபோர்னியா: ஒரு பில்லியன் டாலருக்கு ஸுக்ஸ் (Zoox) என்ற சுய-ஓட்டுநர் (self driving) நிறுவனத்தை வாங்க அமேசான் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு பில்லியன் டாலருக்கு ஸுக்ஸ் இன்க் (Zoox) என்ற சுய-ஓட்டுநர் (self driving) நிறுவனத்தை வாங்க அமேசான் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுயமாக இயங்கும் வாகன தொழில்நுட்பத்தில் அமேசான் நிறுவனம் தனது வரம்பை விரிவாக்க உள்ளது. என்ன விலையில் ஸுக்ஸ் இன்க் நிறுவனத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்ற உள்ளது என்பது குறித்த துல்லியமான விபரம் வெளியிடப்படவில்லை.

ஒரு பில்லியன் டாலருக்கு ஸுக்ஸ் சுய-ஓட்டுநர் நிறுவனத்தை வாங்கும் அமேசான்

கடந்த சில மாதங்களாக ஸுக்ஸ் இன்க் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுகின்றனர். லக்ஸ் கேபிடல், டி.எஃப்.ஜே மற்றும் அட்லாசியன் இணை நிறுவனர் மைக்கேல் கேனன்-ப்ரூக்ஸ் ஆகியோர் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் சிலர் ஆவார்கள். அமேசான் நிறுவனம் கார் துறையில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுய-ஓட்டுநர் கார் நிறுவனமான அரோரா இன்னோவேஷன் இன்க் நிறுவனத்தில் 530 மில்லியன் டாலர் நிதி முதலீட்டை அமேசான் மேற்கொண்டது.