வருவாய் கொட்டிய போதும்…. ரூ.1,868 கோடி நஷ்டத்தை சந்தித்த அமேசான் பே இந்தியா

வருவாய் கொட்டிய போதும்…. ரூ.1,868 கோடி நஷ்டத்தை சந்தித்த அமேசான் பே இந்தியா

2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் அமேசான் பே இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,868.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையில் ஈடுபட்டு வரும் அமேசான் பே இந்தியா நிறுவனம் தனது கடந்த 2019-20ம் நிதியாண்டின் நிதி முடிவுகளை நிறுவனங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்துள்ளது. அந்த ஆவணங்களின்படி, 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் அமேசான் பே இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,868.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் அதிகமாகும்.

வருவாய் கொட்டிய போதும்…. ரூ.1,868 கோடி நஷ்டத்தை சந்தித்த அமேசான் பே இந்தியா
அமேசான் பே

2018-19ம் நிதியாண்டில் அமேசான் பே இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,160.8 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. கடந்த நிதியாண்டில் அமேசான் பே இந்தியா நிறுவனத்தின் வருவாய் நன்கு அதிகரித்துள்ளபோதிலும் நஷ்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019-20ம் நிதியாண்டில் அமேசான் பே இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனம் இந்நிறுவனத்தில் ரூ.2,705 கோடி முதலீடு செய்துள்ளது.

வருவாய் கொட்டிய போதும்…. ரூ.1,868 கோடி நஷ்டத்தை சந்தித்த அமேசான் பே இந்தியா
அமேசான்

அமேசான் பே இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.1,370 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 64 சதவீதம் அதிகமாகும். 2018-19ம் நிதியாண்டில் அமேசான் பே இந்தியா நிறுவனம் ரூ.834.5 கோடியை வருவாயாக ஈட்டியிருந்தது.