ஜியோவை தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு கிராக்கி…. ஏர்டெல்லில் 5 சதவீத பங்குகளை வாங்க துடியாய் துடிக்கும் அமேசான்..

ஜியோவை தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு கிராக்கி…. ஏர்டெல்லில் 5 சதவீத பங்குகளை வாங்க துடியாய் துடிக்கும் அமேசான்..

பார்தி ஏர்டெல் நம் நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட 3வது பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க்கை 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் மெகா கோடீஸ்வரர் ஜெப் பியோசின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோவை தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு கிராக்கி…. ஏர்டெல்லில் 5 சதவீத பங்குகளை வாங்க துடியாய் துடிக்கும் அமேசான்..

அதாவது சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் ஜெப் பியோஸ் முதலீடு செய்யும் எண்ணத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்தால் சியாட்டலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகளாவிய இணைய நிறுவனமான அமேசான், சுனில் பார்தி மிட்டல் நிறுவிய பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வாங்குவதை காணலாம்.

ஜியோவை தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு கிராக்கி…. ஏர்டெல்லில் 5 சதவீத பங்குகளை வாங்க துடியாய் துடிக்கும் அமேசான்..

முன்னதாக முகேஷ் அம்பானியன் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்தா, ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் கே.கே.ஆர். ஆகிய நிறுவனங்கள் மொத்தம் 17.12 சதவீத பங்குகளை ரூ.78,562 கோடிக்கு வாங்கியுள்ளன. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஜியோவின் 2.5 சதவீத பங்குகளை சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதுதவிர அபுதாபியை சேர்ந்த நிறுவனங்களும் ஜியோவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக கூறப்பட்டது. நெருக்கடியில் இருக்கும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை கூகுள் வாங்க போவதாக தகவல் வெளியானது. அதனை வோடாபோன் ஐடியா மறுத்தது.