கன்னட கொடி பிரிண்ட் செய்த பிகினி டிரஸ் விற்பனை.. அமேசானுக்கு எதிராக கொந்தளிக்கும் கன்னடர்கள்

கன்னட கொடி பிரிண்ட் செய்த பிகினி டிரஸ் விற்பனை.. அமேசானுக்கு எதிராக கொந்தளிக்கும் கன்னடர்கள்

அமேசான் நிறுவனம் கர்நாடக அரசின் கொடி, சின்னம் பிரிண்ட் செய்த பிகினி டிரஸ் விற்பனைசெய்வதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அழகற்ற அசிங்கமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுள் தேடுபொறியில் தேடினால் கன்னடம் என காட்டியது. இது கன்னடர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் கர்நாடக அரசியல் கட்சிகள் கூகுள் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

கன்னட கொடி பிரிண்ட் செய்த பிகினி டிரஸ் விற்பனை.. அமேசானுக்கு எதிராக கொந்தளிக்கும் கன்னடர்கள்
கூகுள்

இந்நிலையில் தற்போது அமேசான் நிறுவனம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமேசானின் கனடா பிரிவு, கர்நாடக கொடி மற்றும் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்ட செய்யப்பட்ட பிகினி ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. பெண்களுக்கான கர்நாடகாவின் அசல் வடிவமைப்பு கூட ஆடை என்று அந்நிறுவனம் அந்த ஆடை குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளது. இது தற்போது கர்நாடக மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட கொடி பிரிண்ட் செய்த பிகினி டிரஸ் விற்பனை.. அமேசானுக்கு எதிராக கொந்தளிக்கும் கன்னடர்கள்
அரவிந்த் லிம்பாவாலி

இது தொடர்பாக கர்நாடக பண்பாட்டுத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி டிவிட்டரில், கன்னடத்தை மீண்டும் மீண்டும் அவமதிப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும். இது, கன்னடர்களின் சுய பெருமைக்குரிய விஷயம், இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஆகையால் அமேசான் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமேசானுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவு செய்துள்ளார்.