”அமேசான், பிளிப்கார்ட் – 1.5 கோடி ஃபோன் விற்பனை செய்யும்”ஆய்வு நிறுவனம் கணிப்பு

”அமேசான், பிளிப்கார்ட் – 1.5 கோடி ஃபோன் விற்பனை செய்யும்”ஆய்வு நிறுவனம் கணிப்பு

வரும் பண்டிகை காலத்தில் மட்டும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் நாட்டில் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

”அமேசான், பிளிப்கார்ட் – 1.5 கோடி ஃபோன் விற்பனை செய்யும்”ஆய்வு நிறுவனம் கணிப்பு

டெக்ஆர்க் என்ற ஆய்வு நிறுவனம் இது தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் மொத்தம் 12 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் நாட்டில் விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் 12 கோடியே 70 லட்சம் என்றளவில் மதிப்படப்பட்டு இருந்த நிலையில், பண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ள நிலையில், கூடுதலாக 10 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என மதிப்பீட்டை அந்நிறுவனம் அதிகப்படுத்தி உள்ளது.
இதனிடையே, நடப்பு 2020ம் ஆண்டின் இறுதி காலாண்டில் மட்டும் மொத்தம் 4.1 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என மதிப்பிட்டுள்ளது. மேலும், வரும் பண்டிகை காலத்தில் மட்டும், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் மொத்தம் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் என்றும் இது இறுதி காலாண்டின் விற்பனையில் 36.58 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அமேசான், பிளிப்கார்ட் – 1.5 கோடி ஃபோன் விற்பனை செய்யும்”ஆய்வு நிறுவனம் கணிப்பு

மேலும் பண்டிகை காலத்தில் சாம்சங் மற்றும் ரியல்மி போன்கள் சிறப்பான விற்பனையை பெறும் என்றும், சியோமி, ஒப்போ, விவோ உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை நிலையாக இருக்கும் என்றும் நோக்கியா, லெனோவோ, போகோ, மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அமேசான், பிளிப்கார்ட் – 1.5 கோடி ஃபோன் விற்பனை செய்யும்”ஆய்வு நிறுவனம் கணிப்பு
  • எஸ். முத்துக்குமார்