• March
    30
    Monday

Main Area

Main



காலநிலை மாற்றம்: ரூ.70 ஆயிரம் கோடி நிதி - அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முடிவு

jeff bezos
jeff bezos

நியூயார்க்: காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு இந்திய மதிப்பில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்க முடிவு செய்திருப்பதாக அமேசான் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.70 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேல்) நிதி அளிக்க முடிவு செய்திருப்பதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். இதற்காக பெசொஸ் எர்த் ஃபண்ட் எனும் பெயரில் நிதி ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ttn

இதன் மூலம் விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இயற்கை உலகைப் பாதுகாக்க உதவும் உண்மையான முயற்சிகளுக்கு நிதி வழங்க போவதாக ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார். காலநிலை மாற்றம் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்று பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது இந்த முன்னெடுப்புக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.