மேற்கு வங்கத்தில் வீட்டுக்கே மதுபானம் டெலிவரி செய்ய உள்ள அமேசான், பிக் பேஸ்கட் நிறுவனங்கள்

மேற்கு வங்கத்தில் வீட்டுக்கே மதுபானம் டெலிவரி செய்ய உள்ள அமேசான், பிக் பேஸ்கட் நிறுவனங்கள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வீட்டுக்கே மதுபானம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை அமேசான், பிக் பேஸ்கட் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.

மார்ச் மாதத்தில் நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தபோது இந்தியாவில் மது விற்பனை தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது மே மாதத்தில் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் நூற்றுக்கணக்கான பேர் வரிசையில் நின்றனர். இதன் மூலம் எளிதில் கொரோனா பரவும் என்று சமூக வலைதளங்களில் கொதிப்புடன் கருத்து தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் வீட்டுக்கே மதுபானம் டெலிவரி செய்ய உள்ள அமேசான், பிக் பேஸ்கட் நிறுவனங்கள்

இதையடுத்து ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் சில நகரங்களில் மதுபானம் செய்யத் தொடங்கின. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வீட்டுக்கே மதுபானம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை பிரபல அமேசான் மற்றும் பிக் பேஸ்கட் நிறுவனங்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இந்நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்படவில்லை.