அதிர்ஷ்டம், மன அமைதியைத் தரும் வெள்ளி மோதிரம்!

 

அதிர்ஷ்டம், மன அமைதியைத் தரும் வெள்ளி மோதிரம்!

நகைகள் அணிவது வழகுக்காக, நம்முடைய ஸ்டேட்டஸை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த என்று நினைக்கின்றனர். தங்கம், வெள்ளி, ஐம்பொன், பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் ஆன நகைகளை அணிவது ஆன்மிக ரீதியாக பலன்கள் கொண்டது என்றால் நம்ப முடிகிறதா? அந்தக் காலத்தில் மன அமைதியைத் தரும், அதிர்ஷடத்தைத் தரும் என்பதற்காக வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தை வலது கை சுண்டு விரலில் அணிந்து வந்துள்ளனர்.

அதிர்ஷ்டம், மன அமைதியைத் தரும் வெள்ளி மோதிரம்!

வெள்ளி என்பது உணர்திறன் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இது ஒரு மனிதனின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, உணர்திறனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வெள்ளி பார்க்கப்படுகிறது. மன அமைதியையும், சமநிலையையும் தரக் கூடியதாக உள்ளது.

வெள்ளி என்பது ஆன்மாவின் கண்ணாடியாக ஆன்மிக உலகில் நம்பப்படுகிறது. வெள்ளியின் நிறம் என்பது வெள்ளை மற்றும் கருப்புக்கு இடையேயான சரிசமமான நிலையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது சாம்பல் நிறத்தைக் கொண்டது. அதே நேரத்தில் பளபளப்பும் கொண்டது. இந்த பளபளப்பு செல்வத்தைக் குறிக்கிறது.

வெள்ளி ஆன்மிகத்துடன் மிகவும் நெருக்கமான உலோகம். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

வெள்ளி அணிவதன் மூலம் வாழ்க்கையில் செல்வம் பெருகும், அதிர்ஷ்டம் உண்டாகும். மன அமைதி, அழகு உண்டாகும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, தூய்மைப்படுத்தும். கோபத்தைக் கட்டுப்படுத்தும், மனக் குழப்பம், கப நோய்களைத் தடுக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மோதல் இருந்தால், வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டால் அவர்கள் சுண்டு விரலில் வெள்ளி மோதிரத்தை அணியலாம். அது எதிர்மறை விளைவுகளைக் குறைக்க உதவும்.

வெள்ளி மோதிரம் அனைவருக்கும் பலன் அளிக்காது. அதீத உணர்ச்சி பெருக்கு கொண்டவர்கள், மனதில் இரக்கம் இல்லாதவர்கள், கடினமான மனம் கொண்டவர்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

மோதிரம் அணிவதிலும் சில விதிமுறைகள் உள்ளன. வெள்ளி மோதிரத்தை வாங்கி அதில் ஶ்ரீம் என்ற மந்திரத்தைப் பதித்து, வெள்ளிக்கிழமை, சுக்ர ஹோரையில் சந்தனம் – பன்னீர் கலந்த நீரில் கழுவி, இஷ்ட தெய்வத்தை வணங்கிய பிறகு அணிய வேண்டும்!