Home ஆன்மிகம் தினமும் காயத்ரி மந்திரம் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்!

தினமும் காயத்ரி மந்திரம் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்!

`காயத்ரி’என்பது மந்திரத்தை உச்சரிக்கும் முறைகளில் ஒன்று. காயத்ரி என்ற ஒலியின் அளவைக் கொண்டு இயற்றப்பட்டதால் இதற்கு இந்த பெயர். விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரத்திரத்தை விடச் சிறந்த மந்திரம் உலகில் வேறு எதுவும் கிடையாது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் காயத்ரி மந்திரம் உண்டு.  மந்திர வழிபாட்டில் காயத்ரி மந்திரத்துக்குத்தான் முதல் இடம். காயத்ரி மந்திரம் இல்லாமல் செய்யப்படும் எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது என்று சாஸ்திரம் சொல்கிறது.

காயத்ரி மந்திரம்:

 ஓம் பூர்: புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்..!

இந்த காயத்ரி மந்திரம் சொல்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்குகிறது. நாம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துகள் நீங்கும் என்பது ஐதீகம்! இது தவிர உடல் ரீதியாகவும் பலன்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கே காண்போம்.

1. நினைவு திறன் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கும்.

காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வரும் போது உடலில் உள்ள சக்கரங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. தொண்டை, மூன்றாவது கண் மற்றும் சிரசில் உள்ள சக்கரங்கள் மிகவும் ஆற்றல் பெறுகின்றன. இவை கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்னைகளை நீக்குகிறது.

2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

காயத்ரி மந்திரம் சொல்லும்போது உண்டாகும் வைப்ரேஷன் உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. ஆக்சிஜன் ரத்த நாளங்கள் வழியாக பாய்ந்து சருமத்தை அடைகின்றன. நச்சுக்கள் வெளியேறுகின்றன.

3. சுவாசிக்கும் திறனை மேம்படுத்தும்.

பிரணயமாம் சொல்லிவிட்டு காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்போது நுரையீரல் பளுபடுகிறது. காற்றை இழுத்து வெளியே விடும்போது ஆக்சிஜன் உடல் முழுக்க பாய்கிறது.

4. இதய பிரச்னைகளை நீக்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

நல்ல ரத்தம் அதாவது ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் உடல் முழுக்க பாய்வதால் இதயம் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியத்துடன் செயல்படுகிறது. தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள் இதன் மூலம் கிடைக்கிறது.

5. நம்மிடம் உள்ள தப்பெண்ணங்களை நீக்கும்.

தொடர்ந்து மந்திரம் சொல்வதால் மூளை நரம்பு புத்துணர்வு பெறுகிறது. மூளையை ஃபேக்கஸ்டாக வைக்க தூண்டுகிறது. உடலில் பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கிறது.

6. மூளை, நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்தும்.

காயத்ரி மந்திரம் சொல்லும் போது நம்முடைய நாக்கு, தொண்டை, வாய், உதடு, முக தசைகள் உருவாக்கும் அதிர்வுகள் உடலுக்குப் புத்துணர்வு அளிக்கிறது. மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் தூண்டப்படுகின்றன.

7. மனதை அமைதிப் படுத்தும், மன அழுத்தம், பதற்றத்தைப் போக்கும்.

மனம் ஒருநிலையைப்படும்போது மனதில் உள்ள அழுத்தம், ஸ்டிரெஸ், பதற்ற நிலை மறைகிறது. செரட்டோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அது மகிழ்ச்சியான மனநிலையை அளிக்கிறது.

8. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...
TopTamilNews