kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


மஹா பெரியவர் அருளிய அற்புதமான 9 வரிகள்!

மஹா பெரியவர்
மஹா பெரியவர்
Loading...

பல ஆன்மிக விஷயங்கள் நமக்கு படிப்பதற்கும், பாராயணம் செய்வதற்கும் கடினமாக இருக்கும். ஆனால், அவற்றைத் தொடர்ந்து முயற்சித்தால், நாளாக ஆக அர்த்தங்களும் விளங்கும். 
தினமும் ராமாயணத்தை முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியங்கள் நம்மை வந்து சேருகின்றன. ஆனால், ராமாயணம் படிக்கப் போகிறேன் என்றாலே... எல்லோரும் நம்மை மேலும் கீழுமாகப் பார்ப்பார்கள்.... அறுபது வயதைத் தாண்டுவதைத் தான் ராமாயணம் படிப்பதற்கான தகுதியாகவே இந்த சமூகம் வரையறுத்திருக்கிறது.

maha periyava

சரி... அறுபது வயதில் ராமாயணத்தை முழுமையாகப் படிக்கலாம். இன்றைய அவசர காலத்தில் எப்படி தினமும் ராமாயணத்தைப் படிப்பது? அதற்குத் தான் காஞ்சி மஹா பெரியவர் ஒரு உபாயம் செய்திருக்கிறார்.
முப்பதே வினாடிகளில் சொல்லி இராமாயணத்தை முழுவதுமாக சொல்லி முடிக்கிற மாதிரி அழகான ஒன்பதே வரிகளில் அருளியிருக்கிறார் மஹா பெரியவர்.
தினந்தோறும் இதைப் பாராயணம் செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைப்பது நிச்சயம்.
|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||
|| சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||
|| அங்குல்யா பரண சோபிதம் ||
|| சூடாமணி தர்சனகரம் ||
|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||
|| வைதேஹி மனோகரம் ||
|| வானர சைன்ய சேவிதம் ||
|| சர்வமங்கள கார்யானுகூலம் ||
|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||

maha periyava

இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்... இந்த ஸ்லோகத்தைச் சொல்லி முடித்தாலே முழு ராமாயணமும் படித்து முடித்த பலன்கள் கிடைத்து விடும். 
நல்ல விஷயங்களை நம்மோடு மட்டுமே வைத்துக் கொள்ளாமல், நாலு பேருக்கு எடுத்துச் சொல்லுங்க!

2018 TopTamilNews. All rights reserved.