தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்!

 

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்!

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்!

அமாவாசை தினங்களுள் முக்கியமானது தை அமாவாசை. இந்த நாளில், மக்கள் தங்களது முன்னோர்களுக்கு புண்ணிய நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று முக்கிய கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் இன்றும், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கேரளாவை சேர்ந்தவர்களும் பலி கர்ம பூஜைகள் செய்ய குவிந்திருந்தனர்.

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்!

எள், பச்சரிசி, தர்ப்பை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள், கடலில் நீராடி பூஜையை முடிவு செய்தனர். தை அமாவாசை தினத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு வருவதால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கப்பெறும் என்பது மக்களின் நம்பிக்கை. மக்கள் இன்று தர்ப்பணம் கொடுக்க வருகை புரிந்ததையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதே போல, ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு அதிகாலையில் இருந்தே தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.