சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டத்தை முன்னெடுத்தால் பஞ்சாப் பற்றி எரியும்.. அமரீந்தர் சிங் எச்சரிக்கை

 

சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டத்தை முன்னெடுத்தால் பஞ்சாப் பற்றி எரியும்.. அமரீந்தர் சிங் எச்சரிக்கை

பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லஜ் உள்ளிட்ட நிதிகளின் தண்ணீரை அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் நோக்கில் சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகள் 214 கி.மீ. கால்வாய் அமைக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு தண்ணீர் குறைந்து விடும் என்று எண்ணத்தில் பஞ்சாப் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் செயல்படாமல் பல பத்தாண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டத்தை முன்னெடுத்தால் பஞ்சாப் பற்றி எரியும்.. அமரீந்தர் சிங் எச்சரிக்கை

இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டம் தொடர்பான பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்து ஒரு தீர்வை உருவாக்கவும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சந்திப்பை நடத்தினர்.

சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டத்தை முன்னெடுத்தால் பஞ்சாப் பற்றி எரியும்.. அமரீந்தர் சிங் எச்சரிக்கை

அந்த சந்திப்பின்போது பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறுகையைில், இந்த பிரச்சினையை நீங்கள் தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டம் ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை. ஹரியானாவுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தினால் இந்த விஷயம் தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக மாறும். நீங்கள் சட்லஜ்-யமுனா திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தால்,பஞ்சாப் பற்றி எரியும், அது ஒரு தேசிய பிரச்சினையாக மாறும். ஹரியானா மற்றும் ராஜஸ்தானும் இந்த பாதிப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார். அதேசமயம் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், பல பத்தாண்டுகளாக நிலவும் நீர் பகிர்மான பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறார். அடுத்த சண்டிகரில் பஞ்சாப் மற்றும் ஹரியானா முதல்வர்கள் சந்தித்து பேச உள்ளனர். அதற்கான தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.