அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி!

 

அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி!

அரியலூர்

அரியலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலதுறை சார்பில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன பேரணி இன்று நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாற்றத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி!

பேரணியை வருவாய் துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்ற வாகன ஓட்டிகள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.