மேலும் 23 மாவட்டங்களில் பேருந்து சேவை : 27 மாவட்டங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!

 

மேலும் 23 மாவட்டங்களில் பேருந்து சேவை : 27 மாவட்டங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

மேலும் 23 மாவட்டங்களில் பேருந்து சேவை : 27 மாவட்டங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!

தமிழ்நாட்டில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. தொற்று பரவல் குறைந்த 27 மாவட்டங்களுக்குள் இனி எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். கடந்த வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சேவை தொடங்கப்பட்டது.

மேலும் 23 மாவட்டங்களில் பேருந்து சேவை : 27 மாவட்டங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!

கொரோனா தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 28-ஆம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதில் வகையில் குறிப்பிட்டுள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி ,திண்டுக்கல் ,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி, மதுரை ,பெரம்பலூர் ,புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ,சிவகங்கை, தேனி ,தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் , திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும் , மாவட்டங்களுக்கு இடையையும் பொது பேருந்து போக்குவரத்தை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித இருக்கைகளின் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 23 மாவட்டங்களில் பேருந்து சேவை : 27 மாவட்டங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!

ஏற்கனவே வகை மூன்றில் குறிப்பிட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கிடையே பொதுப் போக்குவரத்தை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்களில் மொத்தம் 27 மாவட்டங்களில் இன்று முதல் காலை 6 மணி முதல் 50 சதவீத இறக்கைகளுடன் மாவட்டங்களுக்கும் மாவட்டங்களுக்கு இடையையும் இயக்கப்படுகின்றன.

மொத்தம் 19 ஆயிரத்து 290 பேருந்துகளில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2600 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 2210 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 513 பேருந்துகளும் ,கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆயிரத்து 592 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆயிரத்து 300 பேருந்துகளும், மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தம் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.