புதிய ஊரடங்கு தளர்வுகள்… உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி

 

புதிய ஊரடங்கு தளர்வுகள்… உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி

கொரோனா பரவல் மத்திய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊரடங்கு தளர்வுகள்… உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி

தளர்வுகளின் விபரம்

உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை உரிய காற்றோட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி

தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி

தங்கும் விதிகள், உறைவிடங்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்

வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உனவருந்த அனுமதிக்கப்படும்.

கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திக்கரிப்பான்கள் வைக்கவும், உடல் வெப்பநிலை பரிசோனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.