“சுகாதார பணியாளர்களை சோதனையிட அனுமதியுங்கள்” – மாநகராட்சி வேண்டுகோள்

 

“சுகாதார பணியாளர்களை சோதனையிட அனுமதியுங்கள்” – மாநகராட்சி வேண்டுகோள்

ஈரோட்டில் டெங்கு ஆய்வு பணிக்கு வரும் பணியாளர்களை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரோட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

“சுகாதார பணியாளர்களை சோதனையிட அனுமதியுங்கள்” – மாநகராட்சி வேண்டுகோள்


இதற்காக 300 வீடுகளுக்கு ஒரு நபர் என, 60 வார்டுகளில், மொத்தம் 450 பணியாளர்கள் ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலகர்கள் தனித்தனியாக ஆய்வுசெய்து வருகின்றனர். இதன்படி கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, பழைய டயர் உள்ளிட்ட நீர்தேங்கும் அனைத்து இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில், வீடுகளில் ஆய்வுசெய்ய வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

“சுகாதார பணியாளர்களை சோதனையிட அனுமதியுங்கள்” – மாநகராட்சி வேண்டுகோள்


இதுகுறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், தற்போது டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வுபணிகள் துவங்கி நடந்து வருவதாகவும், மூன்றாவது மண்டலத்திற்கு உபட்ட பகுதி வீடுகளில் ஆய்வு மேற்கொண்டபோது சிலர் மாநகராட்சி பணியாளர்கள் வீடுகளுக்குள் விட மறுப்பதாகவும் தெரிவித்தார்.
சந்தேகம் இருந்தால், மாநகராட்சி அடையாள அட்டையை சரிபார்த்து ஆய்வுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார். மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகி இருந்தால் முதலில் எச்சரிக்கையும், பிறகு அபராதமும் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் அவர் தெரிவித்தார்.