“ஆக்சிஜன் வாகனங்களை யாரும் தடுக்க கூடாது” – அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடி உத்தரவு!

 

“ஆக்சிஜன் வாகனங்களை யாரும் தடுக்க கூடாது” – அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் அதி தீவிரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டிவிட்டது. பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், இந்தியாவில் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் என்றால் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் விழிபிதுங்கி போயுள்ளன.

“ஆக்சிஜன் வாகனங்களை யாரும் தடுக்க கூடாது” – அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடி உத்தரவு!

எப்படியாவது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் மாநில அரசுகள் ஆக்சிஜனுக்காகக் கையேந்தி நிற்கின்றன. ஆனால் மத்திய அரசோ எதையும் கண்டுகொள்ளாமல் ஆக்சிஜன் அனுப்பாமல் இருப்பதாக டெல்லி அரசு குற்றஞ்சாட்டுகிறது. இந்த விவகாரத்தில் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்தது. ஆக்சிஜனை பிச்சை எடுத்தாவது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தது.

“ஆக்சிஜன் வாகனங்களை யாரும் தடுக்க கூடாது” – அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடி உத்தரவு!

இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த நடவடிக்கைகள் எடுக்கவும் தயார் என மத்திய அரசு இன்னொரு வழக்கு விசாரணையில் உச்ச் நீதிமன்றத்திடம் உத்தரவாதம் அளித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

Image

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது . ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விரைந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல ஆக்சிஜன் விநியோகஸ்தர்கள், உரிமையாளர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளது.