‘உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச் செய்யும்’ – மத்திய அரசு!

 

‘உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச் செய்யும்’ – மத்திய அரசு!

புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல, பல எதிர்ப்புகளையும் சந்தித்து பெரும் முயற்சிக்கு பின் நடப்பு கல்வியாண்டே அமல்படுத்தப்பட்டது. தற்போது 7.5% உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

‘உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச் செய்யும்’ – மத்திய அரசு!

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் மருத்துவ படிப்புக்கு 10% உள்ஒதுக்கீடு சட்டத்தை புதுச்சேரி அரசு கொண்டு வந்தது. அதோடு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் கிரண் பேடி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில், கலந்தாய்வு நிறைவடைய சில நாட்களே எஞ்சியிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டியதால் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு இல்லை என அறிவிக்கப்பட்டது.

‘உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச் செய்யும்’ – மத்திய அரசு!

இந்த நிலையில் புதுச்சேரியில் 10% உள்ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச்செய்யும் என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து, ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.